திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (14:22 IST)

சக்திவாய்ந்த வில்லனை எதிர்கொள்ளும் சூப்பர்ஹீரோஸ்! – கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி தமிழ் ட்ரெய்லர்!

GOTG 3
பிரபல மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களில் ஒன்றான ‘கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கான தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

பிரபல சூப்பர் ஹீரோ படங்களை தயாரித்து உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். இந்த ஆண்டில் ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், தோர், ப்ளாக் பாந்தர் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு படத்தை வெளியிட்ட மார்வெல் அடுத்த ஆண்டு மேலும் சில திரைப்படங்களை வெளியிடுகிறது.

அதில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் Guardians of the Galaxy Vol.3. பீட்டர் க்வில், ராக்கெட், கமோரா, க்ரூட், ட்ராக்ஸ் உள்ளிட்டோர் சேர்ந்த இந்த கார்டியன்ஸ் குழு விண்வெளியில் தனது அடுத்த சாகச பயணத்திற்கு தயாராகிறது.

இந்த முறை இந்த குழு புதிய வில்லன்களை எதிர்கொள்வதுடன், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட முக்கிய கதாப்பாத்திரமான ஆடம் வார்லாக் உடன் மோதுகின்றனர். இதற்கான தொடக்கம் முந்தைய பாகத்திலேயே வைக்கப்பட்டிருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் ஆடம் வார்லாக் வருகிறார். இவர் வில்லனாகவே இருப்பாரா அல்லது கார்டியன்ஸ் குழுவுடன் இணைந்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்த படம் 2023ம் ஆண்டு மே 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில் தற்போது தமிழ் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

ட்ரெய்லரை இங்கே காணலாம்..

Edit By Prasanth.K