புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (11:40 IST)

போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த மருத்துவர் கைது

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடவுளுக்கு இணையாய் பார்க்கப்படுபவர்கள் மருத்துவர்கள். ஏனென்றால் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செய்யும் சில மட்டமான செயல்களால் ஒட்டுமொத்த மருத்துவத் துறையின் பெயரே சீரழிகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவன் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). இவன் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர். குடிக்கு அடிமையான இவன் பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான்.
 
அப்போது பார்களுக்கு வரும் இளம்பெண்களை தனது பேச்சின் மூலம்  வசியப்படுத்துவான். பின் போதைப் பொருட்களை கொடுத்து அவர்களை கற்பழித்து வந்தான். இதில் கொடுமை என்னவென்றால் இதற்கு அவனது காதலியும் கூட்டு.
இதுவரை  போதை மருந்து கொடுத்து 100 பெண்களுக்கு பேருக்கு மேற்பட்டோரை இவன் கற்பழித்துள்ளான். சமீபத்தில் இதுகுறித்து பெண்மணி ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வில்லியம்ஸையும், அவனது காதலியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.