ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (09:03 IST)

சாஸ்தாவான சுவாமி ஐயப்பனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

சபரிமலையில் குடிகொண்டுள்ள சாஸ்தாவான சுவாமி ஐயப்பனுக்கு பல்வேறு பொருட்களை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளின் அபிஷேகம் மீதும் ஒவ்வொரு அருளினை வழங்குகிறார் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.பொதுவாக சுவாமி ஐயப்பனுக்கு நெய், பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கான அபிஷேக பொருட்களை பக்தர்கள் வாங்கி அளிக்கலாம். நெய் அபிஷேகம் நோய் அற்ற வாழ்வை அருளுகிறது. தயிர் அபிஷேகம் கட்டான உடலையும் ஆரோக்கியத்தையும் தருகிறது.

பசும்பாலில் செய்யப்படும் அபிஷேகமானது வீட்டில் செல்வ வளத்தை பெருக்குகிறது. இளநீர் அபிஷேகம் தானிய லாபம் அளிக்கும். பஞ்சாமிர்த அபிஷேகம் ஆயுள் விருத்திக்கு அருளும். விபூதி அபிஷேகம் ஐஸ்வர்யத்தையும், புஷ்ப அபிஷேகம் உயர் பதவிகளையும் அருளுகிறது.

Edit by Prasanth.K