செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (18:32 IST)

திருப்பதியில் நாளை வருடாந்திர புஷ்ப யாகம்: தயார் நிலையில் 7 டன் பூக்கள்

tirupathi
திருப்பதியில் நாளை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற உள்ளதை அடுத்து ஏழு டன் பூக்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த புஷ்ப யாகத்தின் போது ஏழுமலையான் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உடன் இருப்பார் என்பதும் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பால் தேன் தயிர் மஞ்சள் சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் என்றும் அதன் பிறகு புஷ்பத்தால் அபிஷேகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்காக ஏழு டன் பலவிதமான பூக்கள் வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் நான்கு மணி நேரம் இந்த புஷ்ப யாகம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran