புதன், 4 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (18:32 IST)

சங்கடஹர சதூர்த்தியில் விநாயகர் விரதம்!

Vinayagar Chaturthi
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதம் இருந்தால் ஏராளமான நன்மை கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
சங்கடஹர சதுர்த்தி தினத்தில் அதிகாலை நீராடி விரதம் இருக்க வேண்டும் என்றும் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி கொழுக்கட்டை அப்பம் அவல் பொரி ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும் என ஆன்மீகவாதிகள் கூறியுள்ளனர்
 
மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜை செய்தால் விநாயகர் நமக்கு அனைத்து விதமான அருளும் தருவார் என்றும் பின்னர் வீட்டுக்கு வந்து இரவில் நிலவை பார்த்து உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரதம் இருந்தால் எந்த துன்பமும் நம்மை அணுகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran