செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (22:02 IST)

முற்பிறவியில் செய்த பாவம் தீர என்ன செய்ய வேண்டும்?

Guru Bhagavan
முற்பிறவியில் செய்த பாவத்தை தீர்க்க வேண்டும் என்றால் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குரு பகவான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த கோயிலுக்கு வந்து முறையாக வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் என்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாக கருதப்பட்டு வருகிறது. 
 
இந்த கோவிலுக்கு வருவதற்கு 14 தலைமுறைகள் புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே வர இயலும் என்றும் கூறப்படுகிறது. இந்த கோயிலில் குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி அர்ச்சனை செய்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தால் முற்பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்று கூறப்படுகிறது 
 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran