திங்கள், 19 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜனவரி 2026 (17:59 IST)

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?

அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் சிலை.. எந்த கோவிலில்?
தமிழகத்தில் அத்தி மரத்தால் ஆன சிலைகள் மிகவும் அரிதானவை மற்றும் சக்தி வாய்ந்தவை. மயிலாடுதுறை அருகே உள்ள கோழிகுத்தி என்ற கிராமத்தில், 15 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சியில் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறார் வானமுட்டி பெருமாள். அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட இந்த மூலவர், சங்கு, சக்கரம், கதை ஏந்தி மார்பில் மகாலட்சுமியுடன் காட்சியளிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
 
புராண காலத்தின்படி, குடகு நாட்டு மன்னன் தனது தீராத பாவங்களால் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபட, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கி முழுமையான குணம் பெற்றார். கோடி பாவங்கள்  நீங்கிய தலம் என்பதால் இது 'கோடிஹத்தி' என அழைக்கப்பட்டு, பின்னர் 'கோழிகுத்தி' என மருவியது. 
 
ஜாதகத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சனியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சரும நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுவது சிறந்தது. காஞ்சி அத்தி வரதரை போலவே, இந்த வானமுட்டி பெருமாளும் அத்தி மரத்தின் அற்புத சக்தியை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத ஆன்மீகத் தலமாகும்.
 
Edited by Mahendran