வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (15:43 IST)

மனைவி மற்றும் பிள்ளைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கணவன்!

திருவண்ணாமலை மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிசாமி(40).

இவரது மனைவி வள்ளி(37) மகள்கள் திரிஷா(15), மோனிஷா(14), மகாலட்சுமி(6) ஆகிய மகள்களும், சக்தி(6) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக  தன் மனைவி, மகள்கள் மற்றும் மகனை கோடரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் பழனிசாமி.
இதுகுறித்து, அருகில் வசிப்போர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிரேதங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited By Sinoj