திங்கள், 12 ஜனவரி 2026
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஜனவரி 2026 (18:00 IST)

'யோக தட்சிணாமூர்த்தி' எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு மிக்க கோவில்.. எங்கு உள்ளது?

'யோக தட்சிணாமூர்த்தி' எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பு மிக்க கோவில்.. எங்கு உள்ளது?
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணத்தில் அமைந்துள்ள தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோவில், ஆன்மீகச் சிறப்புகள் நிறைந்த ஒரு தலமாகும். இங்கு இறைவன் தீர்க்காஜலேஸ்வரராகவும், இறைவி பாலாம்பிகையாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 
 
சுகப் பிரம்ம ரிஷி வழிபட்ட பெருமை கொண்ட இக்கோவிலில், ஈசனின் 64 வடிவங்களில் ஒன்றான 'யோக தட்சிணாமூர்த்தி' எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும். சனகாதி முனிவர்களுக்கு மௌனத்தின் மூலம் யோக நிலையை உபதேசித்த இறைவனின் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம்.
 
இங்குள்ள யோக தட்சிணாமூர்த்திக்கு இலுப்பை, வேம்பு மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தீபமேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பதும், கல்வியில் மேன்மை கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
 
மேலும், இங்குள்ள சக்திவாய்ந்த சப்தகன்னியரை வணங்கினால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலையிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம், ஒரு சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
 
Edited by Mahendran