1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (18:40 IST)

மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்: 7 தலைமுறைக்கு நன்மை..!

மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறைகளுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
தமிழ் மாதங்களில் விசேஷமாக மாதங்களாக கருதப்படுவது மாசி என்பதும் குறிப்பாக மாசி மகம் தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. 
 
இன்று மாசி மகா தினத்தை முன்னிட்டு ஏராளமானவர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மாசி மகம் தினத்தில் பித்ருகளை வணங்கினால் 7 ஜென்மத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும் என்றும் சகல நன்மைகளும் கிடைக்கும் என்றும் ஐதீகமாக உள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாசி மகத்தை முன்னிட்டு நீர் நிலைகளில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran