ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (20:46 IST)

இன்று தை பிரதோஷம்.. முன்னோர்கள் சொல்வது என்ன?

Nandhi
ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சிவன் கோயில் உள்ள நந்திக்கு பூஜை செய்வது பெரும் பலன் அளிக்கும் என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். 
 
நந்தி பகவான் என்பது சிவபெருமானின் வாகனம் என்பதால் சிவனோடு இருப்பவர் என்பதால் அவரை தரிசனம் செய்வது சிவதரிசனம் செய்வதற்கு சமம் என்று கூறப்படுவது உண்டு 
 
இறைவனின் சன்னதியில் நந்திக்கு பின் நின்று வணங்க வேண்டும் என்ற ஐதீகம்,  இந்த நிலையில் நந்தியை முதலில் வழிபட்டு விட்டு தான் மற்ற கடவுளை வணங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஒவ்வொரு பிரதோஷம் தினத்திலும்  சிவன் கோயில் உள்ள நந்திக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு வழக்கமாக செய்து வந்தால் பெரும் பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
நமச்சிவாயா என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை பிரதோஷ தினத்தில் தியானம் செய்தபடி கூறினால்  சிவபெருமானின் நேரடி அருளை பெறலாம் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran