திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (21:45 IST)

நாளை தை அமாவாசை.. தர்ப்பணம் செய்ய சரியான நாள்!

தை அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என கூறப்படும் நிலையில் நாளை தை அமாவாசை அதுவும் சனிக்கிழமை வருவதால் தவறாமல் தர்ப்பணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது என்று முன்னோர்கள் கூறுவது உண்டு. அன்றைய தினத்தில் முன்னோர்கள் எனப்படும் பித்ரு தர்ப்பணம் செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்று கூறுவது உண்டு
 
எனவே நாளை தை அமாவாசை ஜனவரி 21ஆம் தேதி முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும் 
 
அமாவாசை தினத்தன்று முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி வம்சாவளிக்கு மிகப்பெரிய பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தை அமாவாசை சனிக்கிழமை வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது, ஏழைகளுக்கு தானம் செய்வது ஆகியவை மிகப்பெரிய பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva