திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நிறைவு: 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் 22-ல் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா இன்று நிறைவுபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27 மாலை நடைபெற்றது. அதை தொடர்ந்து, அக்டோபர் 28 இரவு குமரவிடங்கப் பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைதீக முறைப்படி நடந்தது.
இன்று திருவிழாவின் இறுதி நாளில், அதிகாலையில் பூஜைகள் தொடங்கின. இன்று மாலையில் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் சுவாமி வீதி உலா வந்து விழா நிறைவு பெறுகிறது.
விழா நிறைவு நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு தீர்த்தத்தில் நீராடி, சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Edited by Mahendran