1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (18:58 IST)

அட்சய திருதியை: தங்கம் வாங்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

atchaya
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று பலரது எண்ணமாக இருக்கும் நிலையில் ஒருவேளை தங்கம் வாங்க முடியாவிட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து ஆன்மீகவாதிகள் கூறியதை தற்போது பார்ப்போம். 
 
அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதை நம்மால் பார்க்க முடியும்.  அட்சயதிருதியை தினத்தில் தங்க நகை வாங்க வேண்டும் என்றும் தங்கம் வாங்கினால் மிகவும் விசேஷமாக இருக்கும் என்றும் கூறப்படுவது 
 
இந்த நிலையில் அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்கலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு எந்த பொருள் விருப்பமானதோ எந்த பொருள் உங்கள் வீட்டிற்கு வந்தால் விசேஷமாக இருக்கும் நீங்கள் நினைக்கின்றீர்களா அந்த பொருள்களை கடையில் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தங்கம் தான் வாங்க வேண்டும் என்று எந்தவிதமான சாஸ்திரமும் இல்லை என்றும் அதனால் தங்கம் வாங்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்கி பூஜையறையில் வைக்கலாம் என்றும் கூறியுள்ளனர் 
 
அட்சயதிருதியை அன்று குண்டு மஞ்சள் வாங்கினாலே அன்றைய தினம் விசேஷமாக இருக்கும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran