1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (20:06 IST)

கடன் பிரச்சனை தீர வழிபட வேண்டிய தெய்வம்..!

கடன் பிரச்சனை தீர்வதற்கு மகா வராஹி அம்மனுக்கு விரதம் இருக்க வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ வராஹி அம்மனை வழிபாடு செய்தால் அனைத்து விதமான கடன் தொல்லை நீங்கும் என்று நம்பப்படுகிறது.
 
கடன் தொல்லை தீரவும் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக்கொண்டே இருக்கிறது என்ற பிரச்சினைக்கு முடிவுக்கு கொண்டு வரவும் வரவுக்கு மீறி செலவு செல்வதை தடுக்கவும் புதன்கிழமை அன்று வராகி அம்மை தரிசனம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. 
 
மகாவிஷ்ணு சொரூபம் தான் வராகி அம்மன் என்றும் வராகி அம்மனை விளக்கேற்றி வழிபாடு செய்தால் ஏராளமான நன்மை இருக்கிறது என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran