வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (17:46 IST)

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடவடிக்கை!

london -anti pee
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க புதிய  நடவடிக்கையை லண்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்பதால் பல தொற்று நோய்கள், சுகாதார நீர்கேடுகள் உண்டாகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிலும் கொரொனா தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வரும் இக்காலக்கட்டத்தில்  மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய  நகரமான லண்டனில் சோஹோ பகுதியில் சுவர்களில் சிறுநீர் கழித்தால் அவர்கள் மீது திருப்பி அடிக்கும் வகையிலான நவீன ‘anti pee paint’ அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள 10 சுவர்கள் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.