1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:20 IST)

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்: பக்தர்கள் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ததலைமைப்பதியில்  ஆவணி திருவிழா தேரோட்டம் நடந்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
 
விழாவின் பதினோராவது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. 
 
மேலும் காலை 11 மணிக்கு வைகுண்ட சாமி பச்சை பகலில் வாகனத்தில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது அடுத்து இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் 
 
ஐயா வைகுண்ட சாமிக்கு பக்தர்கள் பழம் வெற்றிலை பாக்கு பன்னீர் உள்ளிட்ட பொருள்களை வைத்து அர்ச்சனை செய்தனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran