வியாழன், 28 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (15:56 IST)

மதுரை கோயில்களில் சங்காபிஷேகம்! – திரளான பக்தர்கள் தரிசனம்!

Sanghabishekam
மதுரை அருகே திருப்பரங்குன்றம் அருள்மிகு பால் சுனை கண்ட சிவன் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது.


 
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பின்புறம் உள்ள தென்பரங்குன்றத்தில் அருள்மிகு பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் உள்ளது. இந்த கோவிலில், சிவன் ராத்திரி மற்றும் பிரதோஷ வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

தற்போது, கார்த்திகை மாத திங்கள் கிழமை சோமவாரத்தை முன்னிட்டு, லிங்க வடிவில் 108 சங்குகள் வைக்கப்பட்டு சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, அதன் பின்பு சங்காபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்பு, சுவாமிக்கு வெள்ளிக் கவசமும் 50 ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன.

அதன் பின்பு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதே போல, மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்திலும், திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்திலும், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயத்திலும், வாடிப்பட்டி அருகே வடுகபட்டி காசி விஸ்வநாதர் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் யானை குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், மதிச்சியம் மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரர் ஆலயத்திலும், அவனியாபுரம் மீனாட்சி ஆலயத்திலும் கார்த்திகை சோமாவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சங்குக்கு பூஜை செய்து பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக குழுவினர் செய்திருந்தனர்.