திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (17:49 IST)

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

Meenakshi Amman Temple
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 365 நாட்களும் திருவிழா என்றாலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது
 
 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை கார்த்திகை மாத திருவிழா கொண்டாடப்பட இருப்பதாகவும் இதற்கான கொடியேற்றம் விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கார்த்திகை திருவிழா நாட்களில் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் ஆடி வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வலம் வந்து காட்சி அளிப்பார். டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை திருநாள் அன்று கோவில் முழுவதும் ஒரு லட்சம் தீபம் ஏற்றப்படும் என்றும் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva