புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 மே 2023 (18:30 IST)

காளகஸ்தி கோவிலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசம்: கர்நாடக அமைச்சர் வழங்கினார்..!

kalakasthi
மிகவும் புகழ் பெற்ற காளகஸ்தி கோவிலுக்கு கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி என்பவர் ஒரு கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர். 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் புகழ்பெற்றது என்பதும் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த கோவிலுக்கு வந்த கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ஒரு கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். 
 
ஏற்கனவே இந்த கோயிலுக்கு  தங்க முலாம் பூசப்பட்ட மூன்று வெள்ளி கவசங்கள் இருக்கும் நிலையில் தற்போது முதல் முறையாக தங்கத்தால் ஆன கவசம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran