கால பைரவரை அஷ்டமி தினத்தில் வணங்கினால் ஏராளமான நன்மைகள்..!
கால பைரவரை அஷ்டமி தினத்தில் வணங்கினால் ஏராளமான நன்மை கிடைக்கும் என்றும் குறிப்பாக 21 அஷ்டமி நாளில் விரதம் இருந்து வணங்கினால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கிவிடும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
காலபைரவரை 21 அஷ்டமி நாளில் விரதம் இருந்து வணங்கினால் வாழ்வில் எந்தவிதமான துன்பமும் அணுகாது என்பது ஐதீகமாக உள்ளது. காலத்தின் கடவுளான காலபைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்றும் எந்த துன்பம் வந்தாலும் அதை நொடி பொழுதில் விலக செய்வார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
காலபைரவருக்கு அஷ்டமி தினத்தில் செவ்வரளி மாலை சூட்டி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே கால பைரவரை ஒவ்வொரு அஷ்டமி தினத்தன்றும். வழிபட்டு எதிரிகளின் தொல்லை மற்றும் துன்பத்தை போக்கிக் கொள்ளுங்கள் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran