புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (18:51 IST)

நாளை சித்திரை மாத அஷ்டமி: பைரவருக்கு விரதம் இருந்தால் ஏராளமான நன்மைகள்..!

bairavar
நாளை சித்திரை மாத அஷ்டமி தினம் என்பதால் நாளை பைரவருக்கு விரதம் இருந்தால் ஏராளமான நன்மை கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
பொதுவாக பொருளாதார சிக்கல்கள் உள்ளவர்கள் அஷ்டமி தினத்தில் பைரவரை வணங்க வேண்டும் என்றும் அவர் பொருளாதார சிக்கலை, கடன் தொல்லையை தீர்த்து வைப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
அந்த வகையில் நாளை தேய்பிறை அஷ்டமி வருவதை அடுத்து சிவப்பு நிற அரளி புஷ்பத்தால் பைரவரை பூஜித்து வழிபட்டால் ஏராளமான நன்மை கிடைக்கும் என்றும் குறிப்பாக பொருளாதார சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
தேய்பிறை அஷ்டமி தினத்தில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் செவ்வரளி மாலை சாத்தி சிவப்பு வஸ்திரம் அணிவித்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.
 
Edited by Mahendran