வியாழன், 30 மார்ச் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified ஞாயிறு, 19 மார்ச் 2023 (00:00 IST)

ஆதிபராசக்தி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி

amman
தஞ்சவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுகக்கிட்டங்கித்தெரு ஆதிரபராசக்தி அம்மன் கோவிலில் குடமுழுகு  நிழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, யாசகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, லட்சுமி ஹோமம், கோ பூகை, பூர்ணாகுதி, வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகளும் நடைபெற்றன.

4 கால பூஜைகள் நிறைவு பெற்றதையடுத்து, யாசக சாலையில் வைத்து, பூசை செய்யப்பட்ட புனித நீர் ஊற்றிய கடங்கள் கோவிலை வலம் வந்தது.

இதையடுத்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழுங்க கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,அமைச்சர் மெய்ய நாதன்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.