வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (09:44 IST)

நவம்பர் (ஐப்பசி-கார்த்திகை) மாதத்தில் தவறவிடக் கூடாத விரத நாட்கள், விழா நாட்கள்!

Lord Murugan
ஆங்கிலத்தில் வரும் நவம்பர் மாதமானது ஐப்பசி – கார்த்திகை தமிழ் மாதங்களை உள்ளடக்கியது. இந்த மாதங்கள் ஆன்மீகரீதியா முக்கியத்துவம் வாய்ந்தவை.



ஐப்பசி – கார்த்திகை மாதங்கள் இந்து சாஸ்திரங்கள் படி பல்வேறு முக்கியமான நிகழ்வுகளை கொண்ட நாட்களாகும். முக்கியமாக கார்த்திகை மாதம் முருகனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் முருகனின் அருள் பெரும் கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. இந்த ஐப்பசி – கார்த்திகை மாதங்களில் தவற விடக் கூடாத சில விரத நாட்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து விரத நாட்களிலும் விரதம் இருந்தாக வேண்டியது இல்லை என்றாலும், தங்களுக்கு உகந்த தெய்வத்திற்கான நாட்களில் விரதம் இருந்து வழிபடுவது நல்ல பலனை தரும்.

நாட்களும், விரதங்களும்..:
 
  • நவம்பர் 1 மற்றும் 30 – சங்கடஹர சதுர்த்தி – விநாயகருக்கு விரதம் இருக்க உகந்த நாள்
  • நவம்பர் 19 – திருவோண விரதம் – சிவபெருமானுக்கு உகந்த நாள்
  • நவம்பர் 10 மற்றும் 24 – பிரதோஷ விரதம் – சிவபெருமானுக்கு உகந்த நாள்
  • நவம்பர் 26 – கார்த்திகை விரதம் – முருகபெருமானுக்கு உகந்த நாள்
  • நவம்பர் 11 – மாத சிவராத்திரி விரதம் – சிவபெருமானுக்கு உகந்த நாள்
முக்கிய விழா நாட்கள்:
 
  • நவம்பர் 12 – தீபாவளி திருநாள்
  • நவம்பர் 13 – கந்தசஷ்டி விழா தொடக்கம்
  • நவம்பர் 17 – ஐயப்ப பக்தர்கள் மாலை அணிய சிறந்த நாள்
  • நவம்பர் 18 – முருகபெருமான் சூரசம்ஹாரம்
  • நவம்பர் 24 – வாஸ்து நாள் (புதுமணை புகுவிழாவிற்கு உகந்த நாள்)
  • நவம்பர் 26 – திருக்கார்த்திகை
 
கரிநாளான நவம்பர் 6, 17, 20 மற்றும் 26ம் தேதிகளில் சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.


 
Edit by Prasanth.K