1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (18:39 IST)

ஒரே நாளில் 5 முருகன் கோவிலில் தரிசனம் செய்யலாம்.. தமிழக சுற்றுலா கழகம் ஏற்பாடு..!

ஒரே நாளில் சென்னையை சுற்றி உள்ள ஐந்து முருகன் கோவிலில் தரிசனம் செய்யும் வகையில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. 
 
முதல்கட்டமாக சென்னையில் வாலாஜா சாலையில் உள்ள கந்தகோட்டை முருகன் கோவில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், சிறுவாபுரி பாலமுருகன் கோவில், வடபழனி தண்டாயுதசாமி கோயில், தேனாம்பேட்டை பாலசுப்ரமணியம் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கு ஒரே நாளில் சுற்றுலா செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதேபோல் வல்லக்கோட்டை முருகன் கோயில், குன்றத்தூர் முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில், திருவான்மியூர் அறுபடை வீடு கோவில், மருந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கும் சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த ஒரு நாள் சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்ய கட்டணமில்லா தொலை பேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும்  www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலமும் தகவல் தெரிந்து கொள்ளலாம்..
 
Edited by Mahendran