புதன், 6 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (23:09 IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா

suseendaram
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா  கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது முதல் சிறப்பு பூஜைகள் மற்றும்  அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்ல நேற்று காலை 7 ஆம் திருவிழா நடைபெற்றது. அப்போது, அலங்கரித்த பல்லக்கில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலை  மணிக்கு மூங்கில் மண்டபத்தில் சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 9;30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று 8 ஆம் திருவிழா நடைபெற்றது. இதில், காலை  மணிக்கு ரேஷ்வரர் வீதியுலாவும், 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும், அலங்கார மண்டபத்தில் வைத்து பெருமாள், சிவகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு  பறங்கி நாற்காலி வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

9 ஆம் திருவிழா நாளை நடக்கிறது.,  காலை 7;30 க்கு தொடங்கும் நிலையில்,  நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணா காட்சி நடடைபெறுகிறது.

தெப்பத்திருவிழா 30 ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியாகும்,.   இரவு 8  மணிக்கு தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருளச் செய்து, 3 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறும்., நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.