1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Karur Kalyanapasupadeeswarar Swami performing at the Oonchal Utsavam

ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி

karur
ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி - தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.
கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவள்ளி அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் 12 ம் நாள் திருவிழாவாக கோயில் வளாகத்தின் உட்பிரகாரத்தில் உற்சவர் அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்பு கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நாக ஆரத்திகளை தொடர்ந்து கோபுர ஆரத்திகளும், மஹா தீபாராதனைகளும் சுவாமிகளுக்கு காட்டப்பட்டது. சோடசம்ஹாரங்கள் காட்டப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (10-04-2023)!