1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (16:48 IST)

வளர்பிறை அஷ்டமி நாளில் சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டு பலன்கள் !!

Sornakarshana Bhairava
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபைரவர் அல்லது சொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம்.


வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்.

வீட்டில் உள்ள பீரோவில் வைத்தால் பணம் சேரும். தொடர்ந்து ஆறு வாரங்கள் 48 நாட்கள் விரதமிருந்து தினமும் 108 முறை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவாய நமஹ என்ற மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.

பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.