செவ்வாய், 21 மார்ச் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified புதன், 6 ஜூலை 2022 (15:23 IST)

சூரிய பகவான் பற்றிய சில தகவல்கள் !!

Ratha Saptami
தினசரி சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.


சூரிய பகவானுக்கு உகந்த நாள் இந்த ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கீதையில் கண்ணபிரான் ‘ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான்’ என்று கூறி, ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது.

சூரியனைப் பரம்பொருளாக “ஆதித்ய ஹிருதயம்” கூறுகிறது. “மார்க்கண்டேய புராணம்”, “பவிஷ்ய புராணம்” முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன.

மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் “காயத்ரி” சூரியனுக்கு உகந்த மந்திரம்.

காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.