1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (00:07 IST)

சிவ மந்திரங்களை சொல்வதால் ஏற்படும் பலன்கள் !!

சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். 
 
அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். இந்த மந்திரங்களை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என  சிவ புராணம் சொல்கிறது.
 
1. பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
 
"ஓம் நமசிவாய"
 இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
 
2. ருத்ர மந்திரம்:
 
"ஓம் நமோ பகவதே ருத்ராய"
 
3. சிவ காயத்ரி மந்திரம்:
 
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"
 
4. சிவ தியான மந்திரம்:
 
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
 
5. மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
 
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
 
6. கபாலி மந்திரம்:
 
"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்".