1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Features of Nagalinga flower suitable for Lord Shiva !!

சிவபெருமானுக்கு உகந்த நாகலிங்க பூவின் சிறப்புக்கள் !!

சிவபெருமான்
நாகாபரணம் சார்த்தப்பட்ட சிவலிங்கத்தைப்போன்றே அமைப்புள்ள ஓர் அழகிய மலர்தான் நாகலிங்கப்பூ ஆகும். நாகலிங்கப்பூவின் நடுவில் சிறியதாக ஒரு சிவலிங்கம் இருக்கும். இதற்கு ஆத்மலிங்கம் என்று பெயர். 

நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும். பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான். தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.
 
நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும். 3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.
 
நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
 
நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது, நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான, உஷ்ணமாய் இருப்பதை  உணர்ந்திடலாம் .
 
ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய, சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
காரடையான் நோன்பின் சிறப்புக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!