செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ருத்ராட்ஷத்தை எப்போதெல்லாம் அணியவேண்டும் தெரியுமா...?

ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்விதமாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, புலால் உணவு உண்பவர்கள், கணவன் - மனைவி இல்லற தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா? என்ற கேள்வி  எழுகிறது. முக்கியமாக இவ்விஷயங்கள் அனைத்தும் இயற்கையானது. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானது கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும்போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்கள் ஆன்மாக்கள் மகிழும்.
 
நீராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது  நம்அனைவருக்கும் தெரியும்.
 
பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும்  படிப்படியாகக் குறைந்து விடும்.
 
ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகல விதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும்,  ஆனந்தமும் கிடைக்கும். இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.
 
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை  எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லி வந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.
 
திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சரமந்திரமான "ஓம் நமசிவாய" உச்சரித்தல், இம்மூன்றும் ஒருசேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா  பேரானந்தத்தை அடைவீர்.
 
இம்மூன்றும் சனாதன தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார். மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும். தோஷத்தின் தாக்கங்கள் குறையும். ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து  நற்கதி எற்படும்.