செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 17 நவம்பர் 2019 (11:56 IST)

இன்று முதல் ஐயப்ப சீசன்..

இன்று முதல் ஐயப்ப சீசன்..
கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து 41 நாள் விரதத்தை தொடங்குவர்.

கார்த்திகை மாதம் என்றால் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிவித்து 41 நாள் விரதத்தை தொடங்குவர். அதன் படி கார்த்திகை 1 ஆம் தேதியான இன்று முதல் ஐயப்பனுக்கு விரதம் இருந்து 41 நாட்கள், மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் ஐயப்பனை தரிசிப்பார்கள்.

ஐயப்பனின் நாமத்தை கூறி இருமுடி ஏந்தி, சபரிமலைக்கு புனித யாத்திரை செல்வார்கள். ஐயப்பனுக்கு மாலை அணிவித்து நேர்மையான பக்தியுடன் ஆசைகளை கட்டுப்படுத்தி இருந்தால் ஐயப்பனின் பூரண ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது இந்து மத ஐதீகம் ஆகும்.