நெல்லி மரம் உள்ள இடம் மகாலட்சுமியின் இருப்பிடமா...?
நெல்லி இலைகளால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிக விசேஷமானது .நெல்லி மரம் உள்ள இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
ஏகாதசியன்று தண்ணீரில் நெல்லிக்கனிகள் சிலவற்றை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அதில் நீராட வேண்டும் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி திதியில் நெல்லிக்கனியை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
ஆன்மீக ரீதியாக நெல்லி நீரில் குளிப்பதை கங்கையில் நீராடி காசியில் வசித்த புண்ணியத்திற்கு சமம் என்கின்றனர். நெல்லி ஆயுள் விருத்தி தரக்கூடியது அதனால் தான் கோபுர உச்சியில் கலசத்திற்கு கீழே நெல்லி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள் அதற்கு ஆமலகம் என்று பெயர்.
ஞாயிறு, வெள்ளி, அமாவாசை, சஷ்டி, சப்தமி, நவமி, திதிகளில் நெல்லிக்கனியை பயன்படுத்தக் கூடாது.
நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மை சுற்றி உண்டாக்க கூடியது. அவ்வாறு நேர்மறை எண்ணங்கள் நம்ம சுற்றி அதிகம் ஓடும்போது நாமும் நல்லதை பற்றியே யோசிப்போம். மேலும் நெல்லி மரம் மஹாலக்ஷ்மியின் உள்ளங்கையில் வாசம் செய்வது. அத்தகைய மரத்தை நாம் வீட்டில் வைத்து வளர்த்து வணங்கி வந்தால் செல்வம் அதிகமாக சேரும்.