வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : புதன், 14 டிசம்பர் 2022 (21:33 IST)

திருப்பதியில் சுப்ரபாதத்திற்கு பதில் ஆண்டாள் திருப்பாவை: அதிரடி முடிவு

Aandal
திருப்பதியில் இதுவரை சுப்ரபாதம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சுப்ரபாதம் அதற்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை ஒலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை அதாவது மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சேவை நடைபெறும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
மேலும் ஆழ்வார் திவ்விய பிரபந்த திட்டம் சார்பில் நாடு முழுவதும் உள்ள வைணவ கோவில்களில் திருப்பாவை மகிமைகள் குறித்த சொற்பொழிவு நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
 
மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாதத்திற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva