1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (13:40 IST)

ஒட்டுமொத்த கிராமமே திருப்பதிக்கு சென்றதால் வெறிச்சோடிய வீதிகள்!

tirupathi
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த கிராமமே திருப்பதிக்கு சென்றதால் அந்த கிராமம் முழுவதும் வெறிச்சோடி கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வசந்தபுரம் என்ற கிராமத்தில் 4 வருடங்களுக்கு ஒரு முறை கிராமத்தில் உள்ள எல்லோருமே திருப்பதிக்கு செல்வதை கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
அந்த வகையில் தற்போது திருப்பதி திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த பொதுமக்களும் திருப்பதிக்கு படையெடுத்து உள்ளதால் அந்த கிராமம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது 
 
கிராமத்தின் பாதுகாப்பிற்காக காவல் பணியில் நான்கு காவலர்கள் மட்டும் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒட்டுமொத்த கிராமமே செல்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva