வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : திங்கள், 12 டிசம்பர் 2022 (17:14 IST)

திருப்பதி திருமலை பேடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

anjaneyar
திருப்பதி திருமலை பேடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
திருப்பதி திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். 
 
அந்த வகையில் நேற்று காலை 9 மணிக்கு இந்த சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் ஆஞ்சநேயருக்கு செந்தூரம் அபிஷேகம் செய்யப்பட்டதை அடுத்து அத்தனை சிறப்பு பூஜைகளும் நடந்தது.
 
இந்த சிறப்பு பூஜையில் திருமலை கோவில் அதிகாரிகள் அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
Edited by Siva