1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (10:37 IST)

தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!

நடுத்தர வயது பெண்களின் உடலில், ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரப்பு குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.

மன அழுத்தம். பரபரப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு அதிகப்படியான முடியின் வலிமையானது குறைந்து மன அழுத்தத்தின் அளவானது அதிகரித்துவிடும். இதனாலும் முடி கொட்டும். முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உடலில் குறையும் போது தானாகவே, முடி கொட்டத் துவங்கும்.
 
முடிக்கு இரும்புச்சத்து மற்றும் கரோட்டின் இதில் குறைபாடு ஏற்படும் பொழுது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் தொடங்கும்.
 
முடி கொட்டுதல் ஏற்படும் பொழுது முடிக்குத் தேவையான சத்து நிறைந்த உணவுகளை பார்த்து உண்ண வேண்டும்.
எனவே இவர்கள், தினமும் பேரிச்சம்பழம், பாதாம் பருப்பு. உலர் திராட்சை கருவேப்பிலை, அத்தி பழம், கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
பெண்களைப் பொறுத்தவரையில், தலைமுடியை, இறுக இழுத்துப் பின் கட்டுவதும், இப்படி செய்யவே கூடாது. இப்படி இறுக இழுத்து கட்டுவதால், முடியின் வேர் பகுதி இழுபட்டு முடி நிரந்தரமாகவே உதிர்ந்துவிடும்.
 
முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமாக தேவைப்படும் விட்டமின்கள் A, B, C மற்றும் இரும்பு சத்து கொண்ட உணவு வகைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் முடி கடுமையாக உதிர ஆரம்பிக்கும்.
 
தினசரி காலை எழுந்தவுடன் பதினஞ்சு நிமிடங்களுக்கு விரல் நுனிகளால், தலையில் நன்றாக மசாஜ் செய்து வந்தால் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் வேர்க்கால்கள் பலகீனத்தைப் போக்கும். இப்படி செய்தால் முடி கொட்டுவதை தவிர்க்க முடியும்.