செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் குறிப்புக்கள் !!

சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்து வந்தால், நிச்சயம் சரும வறட்சியைத் தடுத்து பல்வேறு பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஸ் பேக்குகள் சிலவற்றை பார்ப்போம்..!!
குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பதை தவிர்த்து, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். ஏனெனில் சுடுநீர் சருமத்தில் வறட்சியை இன்னும் அதிகரித்து வெடிப்புக்களை அதிகரிக்கச் செய்யும்.
 
ஆலிவ் ஆயிலில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளும் நிறைந்திருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தை அன்றாடம் மசாஜ் செய்து வந்தால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
 
குளித்து முடித்த பின்னர் டவலைக் கொண்டு சருமத்தை துடைப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக டவலைக் கொண்டு ஒத்தடம் கொடுப்பது போல் மென்மையாக  தொட்டு தொட்டு எடுக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாகவும், மேலும் வறட்சியடையாமலும் இருக்கும்.
 
சருமம் என்றால் வாரத்திற்கு ஒருமுறை ஸ்கரப் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும்,  பொலிவாகவும் வைத்துக் கொள்ளலாம்.