வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அன்னாசிப்பழம் !!

எலும்புகளை வலுவாக வைத்திருக்க அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்க்கலாம். இதில் மாங்கனீசு உள்ளது, இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க அத்தியாவசிய தாதுப்பொருளாக கருதப்படுகிறது. 

அன்னாசிப்பழத்தை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது இருதய அமைப்பைப் பாதுகாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. 
 
அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
 
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம்  இருப்பதால், இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். 
 
சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும். அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அவை எலும்புகளை வலிமையாக்குவதோடு, இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும். 
 
ஒரு கப் அன்னாசிப்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 73% மாங்கனீசு நிறைந்துள்ளது. அன்னாசப்பழம் சாப்பிட்டால், ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 
அன்னாசிப்பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.