1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Tips to help give skin a Bright look !!

சருமத்திற்கு பொலிவான தோற்றத்தை தர உதவும் குறிப்புக்கள் !!

சரும பராமரிப்பு
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான நிறமிகளை நீக்க உதவும். இந்த வழி சென்சிடிவ் சருமத்தினருக்கும் மிகவும்  நல்லது.


அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து, முகத்தில் மற்றும் வாயைச் சுற்றி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரால் கழுவ  வேண்டும்.
 
கடலை மாவுடன், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் மஞ்சளை சேர்த்துப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். 
 
அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் அல்லது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து  கொள்ளவும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
ஓட்ஸ் ஒரு அற்புதமான உணவுப் பொருள் மட்டுமின்றி, அழகு பராமரிப்பு பொருளும் கூட. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு  பொலிவான தோற்றத்தைத் தர உதவும். 
 
அதற்கு சிறிது ஓட்ஸ் பொடியுடன், ஆலிவ் ஆயில் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நுரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
பப்பாளியில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவி புரியும். ஆகவே உங்கள் வாயைச் சுற்றி கருமையாக இருந்தால், நன்கு  கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் வாய் பகுதியைச் சுற்றி தடவி, 30 நிமிடங்கள் ஊற  வைத்து, பின் கழுவ வேண்டும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இயற்கையான சரும பராமரிப்பு முறைகளும் பயன்களும் !!