1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வயிற்று பகுதியில் காணப்படும் சதைகளை எளிதில் கரைத்திடும் இஞ்சி சாறு!!

வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். 

பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
 
500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.
 
சாப்பிடும் முறை: காலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.
 
நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சி சாறுடன் சிறுது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து அருந்துவது இஞ்சி ஜூஸ் ஆகும். இது மஞ்சள் காமாலை ஆஸ்துமா சளி இவற்றை நீக்க வல்லது.