1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Some tips to keep face glowing and smooth !!

முகம் பொலிவுடனும் மென்மையாகவும் இருக்க சில டிப்ஸ் !!

Beauty tips
பப்பாளி பழத்தின் துண்டு மற்றும் அதனுடன் ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் 15 நிமிடங்கள் பூசவும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் இருந்த இறந்த செல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, முகம் பொலிவுடனும், மென்மையாகவும் இருப்பதைக் காண முடியும்.


பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும்.

பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.

நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும்.

பப்பாளி மாஸ்க்கை போட்டால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மறைந்துவிடும். பப்பாளி பேக் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குவதுடன், கூந்தலை மென்மையானதாகவும் மாற்றுகிறது.

பப்பாளியில் வைட்டமின் சி, ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை நிறைந்துள்ளன. எனவே பப்பாளி பழத்தின் சிறுதுண்டை நன்கு மசித்து, அதனுடன் தயிர் சேர்ந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
மூச்சு திணறல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் தரும் தாளிசாதி சூரணம் !!