1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (10:05 IST)

தக்காளியை பயன்படுத்தி சருமத்தை பளிச்சிட செய்ய உதவும் சில குறிப்புகள் !!

skin care - tomato
தக்காளியில் கலந்திருக்கும் வைட்டமின் சி முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றுவதை கட்டுப்படுத்தும்.


உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 டீஸ்பூன், தக்காளி விழுது - அரை டீஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

உலர்ந்த சருமம் கொண்டவர்கள் தக்காளியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை ஜுஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும்.

முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து காணப்படுபவர்கள் இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப் செய்யலாம். ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

ஒரு தக்காளி பழத்தை ஜுஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிதளவு தயிர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளிச்சென்று காட்சியளிக்கும்.