1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (17:37 IST)

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் அழகு குறிப்புகள் !!

கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் முகத்தில் நிறம் கூடும்.


தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும். அல்லது, 1 தேக்கரண்டி கடலை எண்ணெய்யில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.

சிறிது சுத்தமான தேனை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இதைப் பயன்படுத்திய பிறகு சருமம் நிறமாகவும் மென்மையாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும்.

ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஃபேஸ் பேக் மாதிரி முகத்தில் பயன்படுத்தலாம்.

முகம் மற்றும் கழுத்து பகுதியில் இந்த கலவையை பூசி சுமார் 20 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் மிதமான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இது முக ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.