1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:00 IST)

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குதிகால் வெடிப்பை சரிசெய்வதற்கான சில குறிப்புகள் !!

ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்துகொண்டு, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீமை சேர்த்து நன்றாக கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு சூப்பர் ஈரப்பதம் கொண்ட கலவையை பயன்படுத்தி வர குதிக்கால் வெடிப்பு மறையும்.


இரண்டு 200 மில்லிகிராம் வைட்டமின் E மாத்திரையை எடுத்து இரண்டாக நறுக்கிகொண்டு கால்களில் அந்த எண்ணெய்யை கொண்டு தடவிகொள்ள வேண்டும்.

குதிகாலில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். இரண்டு கால்களிலும் 400 மில்லிகிராம் வைட்டமின் E எண்ணெய் சேர வேண்டியது அவசியமாகும்.

ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை, குதிகாலில் தூங்க செல்லும்முன் தேய்த்துகொள்ள வேண்டும். சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அது போதுமான அளவில் சூடாக இருக்கும்போது, அதனைகொண்டு கால்களை ஊறவைத்து, அந்த எண்ணெய்யை அதிகம் கொதிக்க வைத்துவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, வெப்ப நிலையை பரிசோதித்து, அதன் பின்னர் தான் கால்களை அதில் ஊற வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.