வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:44 IST)

கைகளை பராமரிக்க சில இயற்கை முறையிலான அழகு குறிப்புகள் !!

Hand Care
சிலருக்கு முகம் ஒரு நிறத்தில், கை ஒரு நிறத்தில் இருக்கும். முகம் நிறமாக இருந்தாலும் கைகள் கருமையடைந்து டல்லாக இருக்கும்.


ஏனெனில் முகத்தை விட கைகள் எளிதில் சூரியக் கதிர்களால் பாதிக்கும். காரணம் அங்கே கொழுப்புகள் மிக குறைவு. அதனால் தோல் மிருதுவாக இருக்கும். எளிதில் சூரியக் கதிர்கள் ஊடுருவும். ஆகவே எளிதில் கருமை ஆகிவிடும்.

கடலை மாவு பேக்: தேவையானவை : கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் - ஒரு சிட்டிகை, பால் - அரை கப். இந்த மூன்றையும் கலந்து கைகளைல் தேய்க்கவும். நன்றாக காய்ந்தபின் கழுவுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் செய்தால், கருமை மாறி கைகள் அழகாகிவிடும். காரணம், கடலை மாவு, இயற்கையான ஸ்க்ரப்பகவும், ப்ளீச்சாகவும் செயல்படுகிறது. மஞ்சள் கிருமி நாசினி. மேலும் பால் ஈரப்பததை சருமத்திற்கு அளிக்கிறது.

பப்பாளி மற்றும் தேன் பேக்: பப்பாளி 3 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன். பப்பாளியை நன்றாக மசித்து, அதனுடன் தேன் சேர்க்கவும். இப்போது கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கழுவலாம். தேன் சிறந்த மாய்ஸ்ரைசர். பப்பாளி நிறம் அளிக்கிறது. இறந்த செல்களை அகற்றி, கருமையைம் போக்கச் செய்யும்.

ஆரஞ்சு தோல் பேக்: கைகளில் சருமத்தின் நிறமே மங்கிப் போய், பொலிவின்றி காணப்பட்டால், ஆரஞ்சு தோல் மிகச் சிறந்த தீர்வு தருகிறது. ஆரஞ்சு தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள். தேவையான பொடி எடுத்துக் கொண்டு, அதில் பாலினை கலந்து கைகளில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவிவிடவும். சருமம் நிறம் கூடி தேஜஸ் வருவதை பார்ப்பீர்கள்.