1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Some beauty tips to enhance your complexion!!

முகத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில அழகு குறிப்புகள் !!

Beauty Tips 1
தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.


சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி  சருமம் பொலிவோடு காணப்படும்.

தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். தண்ணீர் குடிப்பதோடு நல்ல தூக்கமும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால் சருமம் வெண்மையான தோற்றத்தை பெரும்.

சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்த, தினசரி நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கிராமத்து ஸ்டைலில் கோழி குழம்பு செய்வது எப்படி...?