வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (11:47 IST)

தான்றிக்காய் பொடியை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

Thandrikkai
தான்றிக்காய் துவர்ப்பும், இனிப்பும் கொண்ட சுவை கொண்டது. செரிமானத்தின் போது இனிப்பு சுவை கொண்டதாக மாறும். உஷ்ணகுணம் கொண்டது. தொடும்போது குளிர்ச்சியாக இருக்கும்.


கப பித்தங்களை தணிக்கும், மலத்தை வெளியேற்றும், கண்களுக்கு இதம் அளிக்கும், மற்றும் தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன் விதைகளில் உள்ள பருப்பு மயக்கத்தை உண்டாக்கும்.

தான்றிக்காயின் காய், கனி, இலை, விதை என இதன் அனைத்துப் பாகங்களும் மருத்துவ பயன்பாடு கொண்டவை. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போன்றவை சேர்ந்தது தான் திரிபலா சூரணமாகும். தான்றிக்காய் திரிபலா சூரணத்தில் ஒன்றாகும்.

திரிபலா சூரண கலவையை தொடர்ந்து 48 நாட்ள் எடுத்துக்கொண்டால் உடல் இரும்பு போல உறுதியாகி நோயில்லா நீண்ட வாழ்வை அளிக்கும்.
தான்றிக்காயானது தொண்டை கரகரப்பு, தொண்டைப் புண் மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.

வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை போக்க தான்றிக்காயின் பழங்கள் உதவுகிறது.

தான்றிக் காயின் சதைப் பகுதியானது மூல நோய், கை கால் வீக்கம், கண் நோய்கள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும். தான்றிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட மற்றும் வறட்டு இருமல், மற்றும் அம்மை நோய் குணமாகும்.