வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகப்பரு வராமல் தடுக்கும் இயற்கை வழிகள் !!

முல்தானி மிட்டியுடன்  ரோஸ் பேஸ்ட், சந்தன பேஸ்ட் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும். நன்கு உலர்த்திய பின், முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும், இது பருக்களைக் குறைத்து முகத்தின் அழகை அதிகரிக்கிறது.

வேப்பத்தின் பேஸ்ட் சருமத்தில் பருக்களால் உண்டான வீக்கத்தை தளர்த்துகிறது. வேப்ப இலையுடன் மஞ்சளைச் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20  நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
 
எலுமிச்சையிலுள்ள அமில கூறுகள் முகப்பருவை விரைவாக குணப்படுத்துகிறது. எலுமிச்சையை முகத்தில் தேய்த்து, சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தை  தண்ணீரில் கழுவ வேண்டும்.
 
வெந்தயத்தில் ஆன்ட்டி  ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆன்ட்டி  செப்டிக்  பண்புகளைக் கொண்டுள்ளது, இவை பருக்களை அகற்ற  உதவுகிறது.  வெந்தய பேஸ்டை  முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 
கற்றாழை ஜெலில் வீக்கத்தைக் குறைத்து பருக்களை அகற்றும் பண்புகள் உள்ளது. கற்றாழை ஜெல்லை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை முகத்தில் தடவவுவதன்  மூலம்  முகப்பரு வடுக்கள் குறைக்கின்றன.
 
ஆரஞ்சில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது முகப்பருவைக் குறைக்க மிகவும் உதவுகிறது. முகத்தில் ஆரஞ்சு சாறு  மற்றும்  ஆரஞ்சு  தோல்களை பேஸ்டாகி தடவவும், இவ்வாறு செய்வதன் மூலம்  முகப்பரு பிரச்சினைகள் நீக்குகிறது.